சென்னை மாவட்டத்தில், திருப்புகழ் பாடல்பெற்ற சிறப்பு வாய்ந்த கோயில்களில் வியாசர்பாடி அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சூரியன் வழிபட்ட தலங்களில் வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். இக்கோயில் வடசென்னையில் மத்தியில் அமைந்துள்ளது . வியாசர்பாடி என்னும் இப்பெயர் பானுபுரம், வேஷாறுபாடி, வைசியர்பாடி என்றெல்லாம் புகழ்பெற்று, தற்போது வியாசர்பாடி என்று மருவி அழைக்கப்படுகிறது. வியாசர்பாடியின் மத்தியில் உள்ள சிவன் கோயிலில் உறையும் இறைவன் இரவீஸ்வரர் என்றும், இறைவி மரகதாம்பாள் என்றும் வணங்கப்பட்டு வருகிறது. ஒரு பிரகாரத்துடன் கூடிய கோயில் மூலவர் இரவீஸ்வரர், இறைவி மரகதாம்பாள், சூரியன் பூஜித்த தலம். இறைவன் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இறைவன் இரவீஸ்வரர் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளார். மூலவர் கிழக்கு நோக்கிய ஆவுடையார் திருக்கோலம்....