முதலாம் குலோத்துங்கன் கி.பி.1073-ல் எடுப்பித்து விளக்கு வைத்து சென்றுள்ளான். இக்கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் இரண்டாம் இராசராசனுடைய கல்வெட்டு தொன்மையானது. இங்குள்ள ஜேஷ்டா தேவியின் சிலை பல்லவர் காலத்தது. சம்புவரையனான ஆளப்பிறந்தான் வைகாசியில் விழா கொண்டாட கைக்கோளரிடம் வரிவசூலித்தார். பங்குனியில் விழா எடுக்கவும் ஏற்பாடு செய்த செய்தி , அழகிய பல்லவன் கோன்நந்தி பன்மன் (கோப் பெருஞ்சிங்கன்) நன்மைக்காக, இக்கோயிலை கற்கோயிலாகக் கட்டித் திருமணமண்டபமும், இவ்வூரில் வாழ்ந்த வில்லி திருவன் திருகாந்தராய்ன் எழுப்பினார் கி.பி.1626-ல் கிராம மக்கள் 5 காணி நிலப்பரப்பில் பூந்தோட்டமும் இலுப்பைத் தோப்பும் வைக்க ஏற்பாடு செய்தனர். 1760-ல் பிரமீசம் பதிற்றுப் பத்தந்தாதி எழுதிய கச்சியப்பர், ஊரின் செழிப்பை பின் வருமாறு புகழ்ந்துள்ளார். மறைசூழ் பிரமநகர் பலகாலும் ஏத்து...