தருமமிகு சென்னையில் தெற்கே மயிலையும், வடக்கே வொற்றியூரும், மேற்கே வேற்காடும், காமாட்சியும், கிழக்கே வங்க விரிகடலும் எல்லையாக அமைந்துள்ள திருவல்லிக்கேணியில் இக்கோயில் உள்ளது. இப்பகுதியில் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும் போது அம்மன் சிலை கண்டெடுத்து மிகவும் அதிசயத்து வியந்து போற்றினர். அங்கே சிறு கொட்டகை அமைத்து அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து வணங்கி வழிபட்ட செய்தியினை செவிவழி செய்திகள் மூலம் அறியப்படுகிறது இத்திருக்கோயிலின் அம்மனின் சக்தி அளவிட முடியாதது. கோயில் வெள்ளிதோறும் பொங்கலிடுவதும், வேப்பஞ்சேலை உடுத்தி பிரார்த்தனை செய்வதும், பிரத்யோக சிறப்பு அம்சமாகும். அம்மனுக்கு எலுமிச்சை மாலை புனைந்து 11 வெள்ளிகிழமை தொடர்ந்து வழிபடும் பக்தர்களுக்கு வேண்டிய கோரிக்கை நிறைவேறுகிறது. பிணி அகலுகிறது.குறை தீர்க்கிறது மேலும் இவ்வாலயத்தை சுற்றியுள்ள பகுதியில்...
06:00 AM IST - 11:00 AM IST | |
05:00 PM IST - 09:00 PM IST | |
11:00 AM IST - 11:10 AM IST | |
காலை சந்தி 6 மணி சாயரட்சை 5 மணி தினசரி 2 கால காமிகா ஆகமவிதிப்படி பூஜை நடைபெற்று வருகிறது. வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் சிறப்பு பூஜையும், மஞ்சள் காப்பு போன்ற விசேஷ காப்புகளும் நடைபெறுகிறது. |