கரூர் எல் என் சமுத்திரம் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் கரூர் கோவை நெடுஞ்சாலையில் கரூர் நகரை ஒட்டி அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் மூலவர் பெருமாளின் மார்பில் லட்சுமி தாயார் அமைந்துள்ளது சிறப்பு. அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை அன்று வழிபடுவது சிறப்பாகும்