கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்தில் உள்ள சோமூர் கிராமத்தில் அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கரூவூரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும், மண்மங்கலத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் கருவைற, அர்த்தமண்டபம் ஆகியைவ கருங்கற்கைளக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. சதுர வடிவமான கருவைறயின் நடுவே அருள்மிகு சோமேஸ்வரர் வட்ட வடிவ ஆவுடையார் மீது இலிங்க உருவாய் கிழக்கு நோக்கி அருள்பாக்கின்றார். கருவறையின் மேல்பகுதி கருங்கல் பலகைக் கொண்டு மூடப்பட்டுள்ளது. கருவறைப்புறச்சுவர் அதிட்டானம், சுவர், பிரஸ்தரம் ஆகிய பகுதிகள் கருங்கள்களைக் கொண்ம் பிரஸ்தரத்தின் மேற்பகுதியான கிரீவம், சிகரம் ஆகியவை செங்கல் மற்றும் சுதைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.