பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஈசனுக்கு முக்தீஸ்வரர் என்றும் அம்பாளுக்கு மரகதவல்லி என்றும் திருநாமங்கள். இந்த ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்று அம்பிகை, ஈசன் ஆகிய இருவரின் சந்நிதியையும் தரிசனம் செய்யலாம். எழில் கொஞ்சும் திருவடிவுடையாளாகத் திகழும் மரகதவல்லித் தாயாரை வேண்டிக்கொண்டால் செல்வ வளம் சிறக்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள நந்தி பகவான் மிகவும் சக்தி வாய்ந்தவராகப் போற்றப்படுகிறார். கொரானா காலத்துக்கு முன்புவரை இங்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் நந்தி பகவானுக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெற்றுவந்தன. பக்தர்கள் அனைவரும் கூடி நந்தியிடம் தங்களின் பிரார்த்தனைகளை சமர்ப்பிப்பார்கள். சிலர் தங்கள் பிரச்னைகளைக் காகிதத்தில் எழுதிக் கொடுத்து அது தீர வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள். ஒருவர் அதை சத்தமாக வாசித்து நந்தி தேவர் அந்த வேண்டுதல்களை நீக்குமாறு வேண்டுவார்....
| 06:00 AM IST - 12:00 PM IST | |
| 04:00 PM IST - 08:30 PM IST | |
| 12:30 PM IST - 04:00 PM IST | |
| கோவில் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.00 மணி வரை திறந்திருக்கும். மாலை 4.00 மணி வரை கோவில் மூடப்பட்டிருக்கும்.மாலை 4.00 மணிக்கு கோவில் தரிசனத்திற்காக திறக்கப்படும்.திருவிழாவின் போது தினசரி பூஜை நேரங்கள் மாறலாம். | |