Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில், சதுரகிரி, சாப்டூர், சாப்டூர் - 626132, மதுரை .
Arulmigu Sundaramahalingaswamy Temple, Saputur - 626132, Madurai District [TM032109]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

திசைக்கு நான்கு கிரிகள் (மலைகள்) வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் இம்மலை சதுரகிரி என்று பெயர் பெற்றது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர். மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை சஞ்சீவி மலை என்கின்றனர். சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது. பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள். சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்....

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
05:30 AM IST - 12:30 PM IST
04:00 PM IST - 07:00 PM IST
இத்திருக்கோயில் மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதால், பிரதி மாதம் தேய்பிறை பிரதோசம் முதல் அமாவாசை மறுநாள்வரை 4 தினங்களும் மற்றும் வளர்பிறை பிரதோசம் முதல பெளர்ணமி மறுநாள் வரை 4 தினங்களும் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்