இத்திருக்கோயில் நாகலாற்றின் கரையில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இவ்விடத்திற்கு அருகே ஜம்பைப்புல் நிறைந்த அடர்ந்த காடு அமைந்திருந்தது. இராஜகம்பளத்தார் எனப்படும் இனத்தார் அப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்கும் தொழிலை செய்து கொண்டு குடில்களில் வாழ்ந்து வந்தார்கள். அனுதினமும் பாத்திரத்தில் கறந்து வைத்த பால் குறைவது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காரணத்தை கண்டறிய மறைந்திருந்து பாரத்தனர். நல்ல பாம்பு ஒன்று வந்து பாலை பருகியதைக் கண்டு அதை அடிததுக் கொல்ல முயற்சிக்க, பாம்பு அங்கிருந்த புற்றுக்குள் சென்றுவிட்டது. புற்றினை மண்வெட்டியால் தோண்டியபோசது ரத்தம் பீறிட்டது. உள்ளே வாழைப்பூ வடிவத்தில் சுயம்புவாக தோன்றிய கல்லின் இடதுபுறத்தில் ரத்தம் கசிவதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். வாழைப்பூ வடிவ சுயம்புவையும் அதன் இடதுபுறத்தில் தழும்பையும் கருவறையில் இன்றும் நாம் காணலாம்....