இத்திருக்கோயிலில் அம்மனுக்கு உருவச்சிலை இல்லை. பீடம் மட்டுமே உள்ளது. அன்னையை அரூபமாக நினைத்து கரகம் பாலித்து வழிபடும் முறை இதன் சிறப்பு அம்சமாகும். அம்மனுக்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின் போது கரகம் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. சிம்மவாகனத்தில் அம்மன் வீற்றிருக்கும் சிறப்பான திருவுருப்படம் நடுநாயகமாக வைக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர செங்குந்தர் இசைவேளாளர் சமூகத்தினரால் வழிபடக்கூடிய பாண்டுரங்கன், பண்டரிபாய் திருவுருவப்படமும் வைக்கப்பட்டு தீபாரதனை வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.