அருள்மிகு மலைக்கிணர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், செங்குறிச்சி மற்றும் கம்பிளியம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் சானார்பட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ள திருக்கோயிலாகும். இத்திருக்கோய்ல சுமார் 22கி.மீ தொலைவில் உள்ளது. இத்திருக்கோயில் பழமை வாய்ந்த திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி திருக்கோயிலுக்கு அடுத்து பெயர் போன திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் சுரந்த மலை தொடரில் மலை உச்சியில் அழகிய வனத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இங்கு மயில்களும், வானரங்களும் அதிகமாக காணப்படுகிறது. இத்தலத்தில் வற்றாத நீர் சுனை உள்ளது. இதன் பெயர் காரணமாகவே இத்தலம் திருமலைக்கேணி என்று அழைக்கப்படுகின்றது. இத்திருக்கோயிலில் தீர்த்ததொட்டி உள்ளது. ...