திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம், ஆத்தூரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.இத்திருக்கோயிலில் காவி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சியம்மன் என இரண்டு கருவறைகள் கிழக்கு நோக்கி அடுத்தடுத்து அமைந்தள்ளன.இத்திருக்கோயிலில் சித்தி விநாயகர், பால தண்டாயுதபாணிசுவாமி, தர்க்கையம்மன், ஆஞ்சநேயர், சண்டிகேஸ்வரர், கால பைரவர் மற்றும் தட்சிணாமுர்த்தி ஆகிய உபசன்னதிகள் உள்ளன.இத்திருக்கோயிலில் மாத பிரதோஷம் விஷேசமாக இருக்கும்.அக்காலத்தில் காசிக்கு சென்று திரும்புவது பெரும் சவாலாக இருந்ததால் அக்குறையைப்போக்க மக்கள் இச்சிவாலயத்தின் கும்பாபிஷேகத்தின் போது கங்கை நதி தீர்த்தத்தை கொணர்ந்து குடமுழக்கு செய்து சிவபெருமானுக்கு காசி விஸ்வநாதர் எனப்பெயரிட்டு மகிழ்ந்தனர்