முன்னொரு காலத்தில் இந்திர லோகத்தில் ரதி, ரம்பை, ஊர்வசி, என்ற நடன அழகிகளுடன் இந்திரன் மூழ்கி இருந்தார் அப்போது விஸ்வமித்திரர் வருவது தெரியாமல் இருந்து கொண்டிருந்தார். உடனே விஸ்வமித்திரர் சினம் கொண்டு ரதி, ரம்பை, ஊர்வசியை சாபம் விட்டார், உடனே இவர்கள் மூவரும் மன்னிப்பு கேட்டு வேண்டினார்கள். இதன் பிராய்சித்தம் ஏதேனும் கூறுங்கள் என்று கேட்டனர். அதற்கு அந்த முனிவர் மூவரும் பூலோகம் திண்டிமாநகர்,குடகனாற்றின் கரையோரம் சப்த கன்னிமார்களாக அமர வேண்டும். அங்கு வரும் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் அழகராக வருவார். அப்போது அவர் திருவடி சரணம் அடையும் பொழுது சாபவிபோச்சனம் பெற்று இந்திரலோகம் அடைவாய். ஆற்றுக்கு வரும் பக்தர்களுக்கும், பெண்களுக்கும் , தீர்க்க சுமங்கலி,திருமணதடை நீங்க மற்ற...