மேற்படி திருக்கோவில் 1906-ல் தாயமங்கலத்தில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து ஓலைக்குடிசையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக கூறப்படுகிறது இத்திருக்கோவில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. அதன்பிறகு முத்துமாரியம்மன் சன்னதிக்கு வலதுபுறம் விநாயகரும் , இடதுபுறம் ஸ்ரீமுருகருக்கும் தனித்தனியே சன்னதிகள் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்திருக்கோவில் தேவகோட்டை நகர் ஸ்ரீரெங்கபுரம் பகுதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் உள்ள முத்துமாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கி வருகிறத. பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. வருடா வருடம் இக்கோவிலில் ஆடி மாதம் ஆடிசெவ்வாய் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திதிருவிழாவின் போது இதனை குலதெய்வமாக வழிப்படுபவர்களும் , தேவகோட்டை நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் சேவார்த்திகள் வருகை...