விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், மடவார் வளாகத்தில் சிறந்து விளங்கும் தலமான மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற தென்பாண்டி திருநாட்டில் சிறந்து விளங்கும் சிவ தலமான அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை வைத்தியநாதசுவாமி கொழுவிலிருந்து அருளாகி வாரி வழங்கும் திருத்தலம். பிரம்மன், இந்திரன், சூரியன், சந்திரன், அகஸ்தியர், துர்வாசர், பரத்வாஜர் ஆகிய ரிஷிகளால் வணங்கப்பெற்ற இத்தலத்தில் படிக்காசு வைத்தல், காசு வாசி வாங்கல், மிளகு பயிறாக செய்தல், வலையனுக்கு கண் கொடுத்தல், தேவ மித்ரனுக்கு வெண்குட்டம் தீர்த்தல் முதலான 24 திருவிளையாடல்களை நிகழ்த்தியவரும் வைத்தியநாதரே ஆவார். இத்தலத்தில் மடவார்கள் (பெண்கள்) ஆடிப்பாடி இறைவனை வணங்கியதால் இப்பகுதி மடவார்வளாகம் என்றும், அகஸ்தியர் வழிபட்டதால் அகஸ்தீஸ்வரர் என்றும், படிக்காசு வைத்தியருளியதால் படிக்காசு...