இத்திருக்கோயில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், குன்றக்குடியில் அமைந்துள்ளது. இத்திருத்தலமானது திருவண்ணாமலை ஆதினம் ஸ்ரீமத் பொன்னபல தேசிக சுவாமி அவர்களாலார் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இவை குன்றக்குடி ஆதினத்தில் உள்ள குன்றக்குடி அருள்மிகு.சண்முகநாத சுவாமி திருக்கோயில், திப்பத்தூர் அருள்மிகு. திருத்தளிநாத சுவாமி திருக்கோயில், திருக்கோளக்குடி அருள்மிகு. திருக்கோளநாத சுவாமி திருக்கோயில், பிரான்மலை மங்கைபாக நாத சுவாமி திருக்கோயில், சதுர்வேதமங்கலம் அருள்மிகு.ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில், தென்கரை அருள்மிகு. தோனாட்சியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களின் அலுவலகம் ஆகும்.