சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் இளையாத்தங்குடியில் அருள்மிகு கைலாசநாதசுவாமி மற்றும் நித்யகல்யாணி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.இந்திர லோகத்திலிருந்து தேவர்கள் பூலோகத்திற்கு வரும் போது இந்த இடத்திற்கு வந்து தங்கி இளைப்பாறியதாக கூறப்படுகிறது. சிவபெருமானுக்கு உகந்த நகரங்களுக்குள் மிகச் சிறப்புற்றது. இளைப்பினை ஆற்றும் நகரம் அதனால் இளையாத்தங்குடி என பெயர் பெற்றது