இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் 1605 ஆம் ஆண்டு முதல் சேதுபதி மன்னர்களால் நிர்வாகம் செய்யப்பட்டு தொடர்ந்து தற்போது சேதுபதி இராணி ... இராஜேஸ்வரி நாச்சியார், பி,ஏ., அவர்களால் நிர்வாகம் செய்யப்பட்டு வரப்படுகிறது. இந்நிர்வாகத்தில் உள்ள பொது தேவஸ்தானம் என்பது இராமநாதபுரம் சமஸ்தானம் நிர்வாகம் செய்யும் திருக்கோயில்களின் நிர்வாக அலுவலகமாகும். இவ்வலுவலகம் மூலம் 25 பட்டியலைச் சேர்ந்த திருக்கோயில்கள், 20 பட்டியலைச் சேராத திருக்கோயில்கள், 9 கட்டளைகள் மற்றும் 37 துணைக்கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டும் வழிகாட்டுதலின் படியும் நிர்வாகம் செய்யப்பட்டு வரப்படுகிறது.