இத்திருக்கோயில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், தளக்காவூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மிகவும் பழமையான திருக்கோயிலாகும். 1858ம் ஆண்டு இத்திருக்கோயிலுக்கு திருப்பணி செய்தது சம்மந்மாக கல்வெட்டு தற்பொழும் திருக்கோயிலில் காணப்படுகிறது. இத்திருக்கோயிலின் மூலவர் அருள்மிகு அதளநாயகி அம்மன் சிலாவிக்ரமாக அமர்ந்த நிலையில், தலையில் சுவாலை மகுடம், பத்து கைகள்உரிய முத்திரையுடன் அகோர ரூபமாக வீற்றிருக்கிறாள். கர்ப்பக்கிரகத்திற்கு வெளியே விநாயகர், கருப்பர் மற்றும் பலிபீடம் அமைந்துள்ளது. தனியாக சிறு மண்டபத்தில் வடகிழக்கு மூலையில் நவக்கிரக விக்கிரகங்கள் அமையப்பெற்றுள்ளது.