கைலாசபுரம் அருள்மிகு கைலாசநாதசுவாமி திருக்கோயில் 13,14நூற்றாண்டை சார்ந்தது. பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டது எனவும் தொல்லியல் கருத்துரு மூலம் தெரிய வருகிறது. இத்திருக்கோயில் மூலவர் கைலாசநாதசுவாமி உடனுறை சௌந்தர வள்ளி அம்மாள் ஆவார்கள். கைலாசநாதர் சிவலிங்க வடிவிலும் சௌந்தர வள்ளி அம்பாள் நின்ற வாறும் காட்சி அளிக்கின்றனர். இத்திருக்கோயில் சைவம் பிரிவைச் சார்ந்தது. திருக்கோயில் கோபுரம் சாஹாரம் வகையைச் சார்ந்தது. வெளிச்சுற்றில் சூரகதேவர் கணபதி நாகர் காசி விஸ்வநாதர் ஏகநாதர் லிங்கம் முருகன் வள்ளி தெய்வானை சனீஸ்வரர் பைரவர் முதலான தெய்வங்கள் அருள் பாலிக்கின்றன.