மூலவா் - அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அம்பாள் - அருள்மிகு வள்ளி மற்றும் தெய்வானை தீர்த்தம் - கல்யாணதீர்த்தம் ஆண்டு - 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட திருக்கோயில் இருப்பிடம் - பாபநாசத்திலிருந்து காரையாறு செல்லும் வழியில் அகஸ்தியர் அருவிக்கு அருகில் அமைந்துள்ளது. பா்வதராஜன் பெற்றெடுத்த புதல்வியாகிய பாா்வதி தேவியைச் சிவபிரான் திருமணஞ் செய்து கொள்ளுங்காலத்து தேவா்களும் முனிவா்களும் மற்றையாவரும் இம்மலையின் அருகே ஒன்றுகூடியமையால் பூமியின் வடபுறம் தாழ்ந்து தென்புறம் உயா்ந்துவிட்டது. அது கண்ட சிவபிரான் அங்கிருந்த அகத்திய முனிவரை நோக்கி, நீா் தென்பால் உள்ள பொதிகை மலைக்குச் சென்று தங்கினால் பூமி சமமாகி விடும். ஆதலின் தென்திசை நோக்க செல்லுக என்ற கட்டளை இட்டாா். உடனே அகத்தியா், பெருமானே யான் தேவசீரது திருமணக்காட்சியை...