திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் காரையாரில் அருள்மிகு சொரிமுத்தையனார் திருக்கோயில் சுமார் 21 ஏக்கர் நிலப்பரப்பளவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குள் அமைந்துள்ளது. இதில் அருள்மிகு சொரிமுத்தையனார் பூர்ணகலை, புஷ்கலையுடன் காட்சியளிக்கிறார். மேலும் இத்திருக்கோயிலில் மகாலிங்கசுவாமி சன்னதி, அருள்மிகு சங்கிலி பூதத்தார் சன்னதி, அருள்மிகு பிரம்ம ரட்சஷி அம்மன் சன்னதி, அருள்மிகு தளவாய் மாடசாமி சன்னதி, அருள்மிகு பட்டவராயன் சன்னதி போன்ற சன்னதிகளும் உள்ளன. மேலும் இத்திருக்கோயிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிகிழமை, தை அமாவாசை, பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தும் நேர்த்திகடன் செய்தும்...