இத்திருக்கோயில் தசரா திருவிழாவிற்கு பிரசித்தி பெற்ற அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலின் உபயகோயிலாகும். கடற்கரை அருகில் அமைந்துள்ள மிகவும் பழமைவாய்ந்த சிவாலயம் ஆகும். சிவகாமி அம்மன் உடனாகிய சிதம்பரேஸ்வரர் தரிசிக்கும் போது தில்லையில் நடனமாடும் நடராசபெருமானை தரிசித்துக் கிடைக்கும் பலன் கிடைக்கும் என்பதே இத்திருக்கோயில் வரலாறு ஆகும்.