இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் கால பைரவர் இல்லாத கோவில்களே இல்லை என்று கூறுமளவு மிகவும் பெருமை பெற்றவர் கால பைரவர். இவர் கைகளில் திரிசூலம், உடுக்கை மற்றும் வெட்டப்பட்ட ஒரு தலையுடன், உடலில் சாம்பல் பூசிக் கொண்டு, நாய் மீது அமர்ந்த படி மிகவும் பயங்கரமாக காட்சியளிப்பார். இவரை வணங்கினால் பல இன்னல்களில் இருந்து நம்மை விடுவிப்பார் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கை. இவ்வளவு பெருமைமிக்க கால பைரவர் எப்படி அவதரித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள். இங்கு ஸ்கந்த புராணத்தில் கால பைரவர் தோன்றிய கதை குறித்து கொடுக்கப்பட்டுள்ளது