அமைவிடம் சென்னை மாவட்டம், புரசைவாக்கம் வட்டத்தில் சூளை கிராமம், கதவு எண்.18, வாத்தியார் கந்தன் தெருவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னை சென்ரல் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும், புரசைவாக்கத்திலிருந்து சுமார் 01 கி.மீ தொலைவிலும் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னை பாரிமுனையிலிருந்தும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தும், மின்ட் வள்ளலார் நகர் பேருந்து நிலையத்திலிருந்தும் பேருந்து வசதி உள்ளது. திருக்கோயில் அமைப்பு இத்திருக்கோயில் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலுக்கு வைகானச ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் உள்ள பெருமாள் திருக்கோயில்களில் இது முக்கியத்துவம் வாய்ந்தது. இத்திருக்கோயில் கி.பி.18ம் நூற்றாண்டு முற்பகுதியில் தோற்றுவைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை மிக்க திருக்கோயிலாகும். இதன் காலம் கி.பி.1700 1725 எனலாம். இத்திருக்கோயில்...