இந்த சிவாலயமானது சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை செயலகத்திற்கு வடக்கில் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் மேற்கு சரகத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் பரப்பளவு சுமார் 10,000 சதுரடி ஆகும். இந்த ஆலயத்தின் பின் பகுதியில் சுமார் 12,000 சதுரடி பரப்பளவு கொண்டுள்ள ஆலய திருக்குளம் அமைந்துள்ளது. இந்த திருக்குளத்தின் பெயர் சிவகங்கை தீர்த்தத் திருக்குளமாகும். இந்த ஆலயமானது, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், திருமணம் (தற்பொழுது சித்தர்காடு என அழைக்கப்படும்) என்ற கிராமத்தைச் சார்ந்த, கண்டமகாரிஷி கோத்திரம், செங்கற்சூளை முத்து முனியப்ப முதலியார் அவர்களால், அவர்தம் தந்தையாரான திருமணம் அருணாசல முதலியார் அவர்களுடைய சுய வருவாயினைக் கொண்டு அவர்தம் தாய், தந்தை, குரு ஆகியவர்களின்...