தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், ஜெகவீரபுரம் கிராமத்தில் அருள்மிகு ஆறுமுகசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தினமும் இரு கால பூஜை மட்டும் நடைபெற்று வருகிறது. தைப்பூசம், மாத கிருத்திகை அன்று சிறப்பு அபிஷேகம் , பூஜைகள் நடைபெறும். விளாத்திக்குளத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் ஜெகவீரபுரம் அமைந்துள்ளது. புதூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.