முன்பு ஒருமுறை காசியப்ப முனிவரின் புத்ரராகிய காலவமுனிவர் என்பவர்சிவண்ணியம் கைக்கூட்டி இருவினையொப்பும் மலபரிபாஉறமும் சத்திநிபாதமும் உற்று பதி பசு பாசம் ஆகியவற்றை தனதுமதி நுட்பத்தாலே ஆராய்ந்து பதியாகிய சிவபெருமானை அடைவதற்குரிய நெறி சிவலிங்க உபாசனையே என்று உணர்ந்தார். ஆதலால் சிவலிங்க பெருமானை சிறந்த தலத்தில் வழிபட வேண்டும் என்று விரும்பினார். சிவபெருமானை தலங்கள் தோறும் தரிசித்துக் கொண்டே கொங்கு நாட்டை அடைந்தர்ர். கொங்கு நாட்டிலே உள்ள பல சிவாலயங்களை தரிசித்து விட்டு கடைசியாக ஆதிமாபுரி எனும் பேரூரை வந்தடைந்தார். பேரூரில் காஞ்சி ஆற்றங்கரையில் தங்கினார். சிவலிங்க உபாசனை எளிதில் கை கூடுவதற்கு உரிய தலம் பேரூரே என்று உணர்ந்தார். காஞ்சி நதியில் ஸ்நானம் செய்து பட்டிப் பெருமானை தரிசனம் செய்து ஆ ற்றங்கரையில்...