இத்திருக்கோயில் கோவை மாவட்டம் பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலின் உபகோயிலாக விளங்குகிறது. இத்திருக்கோயில் வரலாறு பேரூர் புராணத்தோடு சேர்ந்தது. இத்திருக்கோயில் பேரூர் கோயிலின் வடதிசையில் உள்ளது.உலக உயிர்களை படைக்கும் தொழிலை மேற்கொண்டுள்ள ப்ரம்மதேவர் யோக நித்திரையிலிருந்து விழித்து உலகத்தை படைக்க எண்ணிய போது நித்திரையிலிருந்து விழித்து உலகத்தை படைக்க எண்ணிய போது வேதங்களின் முறையை மறந்தமையால் படைப்பு கைகூடவில்லை. உடனே ப்ரம்மதேவர் சிவபெருமானைச் சார்ந்து வருந்தி தன் பிழையை பொறுத்தருள வேண்டினார். பெருமான் கொங்கு தேசத்தின் மேற்கு திசையில் இருக்கும் திருப்பேரூரில் அரசமர அடியில் வெள்ளியம்பலத்திலே தாம் பட்டிநாதர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளதாகவும் அங்கே விஷ்ணு கோமுனியாக காலவமுனிவருடன் தவமியற்றி வருவதாகவும் நீயும் அங்கு சென்று தவமியற்றி...