இத்திருக்கோயில் சென்னிமலை நகரில் காங்கயம் ரோட்டில் அமைந்துள்ளது. அருள்மிகு மாரியம்மன் வடக்கு பார்த்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அம்மனுக்கு மேற்கு புறம் விநாயகர் சன்னதியும், வடமேற்கு மூலையில் கருப்பண்ண சுவாமியும் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முதல் புதன்கிழமை அன்று பூச்சாட்டு நிகழ்வும் அதற்கு அடுத்த புதன்கிழமை கம்பம் நடும் விழாவும், அதற்கு அடுத்த புதன்கிழமை மாவிளக்கும், வியாழன் அன்று பொங்கல் திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலில் கடந்த 31.08.2006 அன்று மகா கும்பாபிசேகம் நடைபெற்றுள்ளது.