சென்னிமலை நகரிலிருந்து பெருந்துறை செல்லும் சாலையில் சுமார; 5 கிலோ மீட்டர; தொலைவில் பிடாரியூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் திருப்பணிகள் யாவும் மேற்கொள்ளப்பட்டு மஹா கும்பாபிஷேகம் 27.08.2010-ம் நாளன்று நடத்தப்பட்டது. இதற்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற விபரம் ஏதுமில்லை. இத்திருக்கோயிலுக்கு இனாமாக வழங்கப்பட்ட புஞ்சை பூமி 52.94 ஏக்கர; 1863-ல் ஸ்ரீரங்கப்பட்டிணம் ஹைதர;அலி நவாப் என்பவரால்; உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.