திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், வாசுதேவன்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வீரநாராயணப்பெருமாள் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமைவாய்ந்த திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் செங்கம் செயல் அலுவலரால் நிர்வாகம் பார்த்துவரப்படுகிறது. இத்திருத்தலம் செங்கம் நகரில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.