அருள்மிகு கோபாலகிருஷ்ணசுவாமி திருக்கோயில், உபகோயில் அருள்மிகு விசாலாட்சி அம்மன் விஸ்வநாதசுவாமி திருக்கோயில், உபகோயில் அருள்மிகு ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில் என்ற இந்த மூன்று திருக்கோயில்களும் கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ளன. இதில் அருள்மிகு ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில் பக்தர்கள் அதிகம் வந்து தரிசனம் செய்து செல்லும் திருக்கோயிலாக உள்ளது.இத்திருக்கோயிலில் ஸ்ரீஆஞ்சநேயர் தெற்கு நோக்கி அபயஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயராக காட்சியளிப்பது சிறப்பாகவும், அனுமார் சன்னதிக்கு மேற்கே ஸ்ரீராமர், இலட்சுமணர், சீதை அனுமார் சன்னதியும் அமைந்து உள்ளது. ஸ்ரீஅனுமார் தன்னை நம்பியவருக்குத் துணை செய்து அனைவரையும் காத்து அருள்புரிகிறார்.