திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் முதலில் தூண்டுகை விநாயகரை தரிசித்து தேங்காய் விடல் போட்டுவிட்டு பின்பு முருகனை தரிசிக்க வருகின்றனர். முருகனுக்கு பால்குடம் மற்றும் காவடி எடுக்கும் பக்தர்கள் தூண்டுகை விநாயகர் கோயிலில் இருந்துதான் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வருகின்றனர். இக்கோயிலிலிருந்து சண்முக விலாசம் இருநூறு மீட்டர் தொலைவில் உள்ளது. தூண்டுகை விநாயகர் கோயில் 1) விடலை போடுமிடம் 2) மகா மண்டபம் 3) அர்த்த மண்டபம் 4) கருவறை என நான்கு பிரிவுகளாக அமைந்துள்ளது. துண்டி விநாயகர் என்பதே சரியான பெயர் காசியில் டுண்டி விநாயகர். அர்த்த மண்டபத்திலுள்ள ஒரு கல்லில் மயில் மீது முருகன் ஒரு பெண்ணுக்குக் காட்சி தருவதைக் காணலாம். விநாயகர் சிலை கோபுர அமைப்போடு...