வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம் பசுமாத்தூர் கிராமத்தில் இத்திருக்கோயில் அமைய பெற்றுள்ளது வேலூர் குடியாத்தம் செல்லும் சாலையில் வேலூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகொண்டா அடுத்து மூணு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பசுமாத்தூர் கிராமத்தில் அருள்மிகு பசுபதி பொன்னியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் இவ்வூருக்கு கிராம தேவதையாக இருந்து பூஜிக்கப்பட்டு வருகிறது காணும் பொங்கல் அன்று சிறப்பாக உற்சவம் நடைபெறுவது வழக்கம்