திருக்கோயில் நடை திறந்திருக்கும் நேரம் காலை 6.30 முதல் 1.00 வரை மாலை 4.00 முதல் 8.00 வரை வெள்ளி, சனி,ஞாயிறு மற்றும் விசேட நாட்களில் நாள் முழுவதும் திருக்கோயில் நடை திறந்திருக்கும். ஒவ்வொரு ஆடி அமாவாசையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அருள்மிகு சித்தேசுவர சுவாமியை வழிபட வருகின்றனர். சேலம் மாநகரிலிருந்து இத்திருக்கோயிலுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நகரப்பேருந்துகள் வந்து செல்கின்றன. பேருந்து எண்கள் 28ஏ, 29,29ஏ,68,68பி, 75,81,91 மற்றும் இளம்பிள்ளை வழியாகச் செல்லும் புறநகர் பேருந்துகள். இவை அனைத்தும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. அமாவாசைத் தினத்தன்று காலை முதல் இரவு வரை தமிழ்நாட அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்குகின்றது. அமைவிடம்:- சேலத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.