அருள்மிகு சேர்வராயசுவாமி திருக்கோயில் அமையப்பெற்றுள்ள ம்ம்சேர்வராயன் மலைப் பகுதி தமிழ்நாட்டில் உள்ள சேலம் நகருக்கு அருகில் காணப்படும் மலைத்தொடர்ச்சியாகும். இது கல்வராயன் மலையின் மேற்கில் தனக்கென 400 ச. கி.மீ. பகுதியை கொண்டுள்ளது. வாணியாற்றுப் பள்ளத்தாக்கு கிழக்கு, மேற்கு பகுதியாக இம்மலையைப் பகுக்கின்றது. இம்மலை கடல்மட்டத்தை விட 4000 - 5000 அடி உயரம் கூடுதலாகும். இந்த மலையில் இயற்கையின் ஊற்றாக நிறைய மரங்களும், மூலிகைச் செடிகளும், காட்டு விலங்குகளும் இருக்கின்றன. மலையாட்கள் மலையாளிகள் - மலை வாழ் பழங்குடிமக்கள் மற்றும் வெள்ளாளர்கள் மிகுந்துக் காணப்படுகிறார்கள்.1. இம்மலையில் காப்பி ,பழவகைகள் விளைவிக்கப்படுகிறது. இம்மலையில் உள்ள பெரிய ஊரான ஏற்காடு நகரம் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா இடமாகும்.