இறைவி : அருள்மிகு காளியம்மன் ஆகமம் : சிவஆகமம் தலவரலாறு முற்காலத்தில் கத்தாளை, மணல் மேடாக இந்த பகுதி திகழ்ந்தது. தினந்தோறும் மாலை வேளைகளில் இந்த பகுதிகளில் சிறுவர், சிறுமிகள் விளையாடிக் கொண்டிருப்பது வழக்கம். தங்களுடன் ஒரு சிறு பெண் குழந்தை பட்டுப் பாவாடை அணிந்து விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட சிறுமியர்கள் தங்களது பெற்றோர்களிடம் தனக்கும் பட்டுப் பாவாடை வேண்டுமென கேட்டுள்ளனர். பெற்றோர்களுக்கு சந்தேகம் எழுந்தது. ஏனெனில் அக்காலத்தில் பட்டு பாவாடை அணியும் அளவிற்கு வசதி வாய்ப்பில்லை. அடுத்த நாள் பெற்றோர்கள் குழந்தைகள் விளையாடுவதை கவனித்த தொடங்கினார்கள். பட்டுப்பாவாடை அணிந்த குழந்தை பெற்றோர்கள் கண்களுக்குத் தென்படவில்லை. ஒரு சில தினங்களில் ஒரு பெண் குழந்தைக்கு அருள் வந்து நான் காளியம்மன் வெளியூரிலிருந்து வந்து உள்ளேன், எனக்கு இந்த...