உலக வாழ்க்கையில் பற்றில்லாமல் ஞான வரம்பாகிய மௌனத்தை கடைப்பிடித்தவராய் பரம தியானத்தில் ஆழ்ந்து இருள் - ஒளி, குளிர் - வெம்மை, சுக - துக்கம், விருப்பு - வெறுப்பு ஆகிய இருமைகளைக் கடந்தவர்களை முனி என்று புராணங்கள் கூறுகின்றன. ரிக் வேதத்தில் முனி என்பவர் தெய்வ ஆவேசம் படைத்தவர் என்றும், பயமற்றவர் என்றும் குறிப்பிடப்படுகிறார். இப்படியான முனிவர்களுக்கெல்லாம் ஈசுவரனாக இருந்து ஞானத்தை வழங்கியவரும், உலக உயிர்களுக்கு இன்றும் ஞானத்தை வழங்கி வரும் கடவுளாக விளங்குபவர் தான் முனீஸ்வரர் ஆவார். நடுப்பட்டி சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் திருக்கோயில் தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், மொரப்பூர் அருகில் நடுப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.இத்திருக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.இத்திருக்கோயில் முனீஸ்வரர் சுவாமி சன்னதி உள்ளது....