தமிழ்நாட்டில் திருமேனியை மட்டுமல்ல கலை பண்பாடு, நாகரீகம், பொருளாதார சிறப்பக்கலை ஓவியக்கலை ஆன்மீகம் இறையுணர்வு போன்ற பல்வேறு வளர்ச்சிகளுக்குள் ஆறுகளே காரணமாக இருந்துள்ளன ஒருநாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது ஆறுகளே எனலாம். அத்தகாய புனித ஆறுகளில் ஒன்றான தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள அற்ப்புத தலம் தான் அனுமந்தீர்த்தம். ஸ்ரீ ராமனுக்கு தூதுவனாக மட்டுமல்ல அல்லும்பகலும் ஸ்ரீ இராம ஜெபத்தையே தயாராக மந்தரமாக ஜாபித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ இராம பக்கதனாக விளங்குபவர் அருள்மிகு ஆஞ்சநேயர். அஞ்சனா தேவியின் புத்திரனான ஸ்ரீ ஆஞ்சநேயர் இங்கே அருள்மிகு அனுமந்தீஸ்வரர் எனும் திருப்பெயருடன் அருளிவருகின்றார். சேலத்திலிருந்து-அரூர்-ஊத்தங்கரை வழியாக வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் அரூரிலிருந்து 16 கி.மீ தொலைவில் இத்திருத்தலாம் அமைந்துள்ளது. ஆற்றங்கரையில் புளியந்தோப்பில் நடுவில் எழுந்தருளியுள்ள...