கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சாலமரத்துப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சென்றாயசுவாமி திருக்கோயில் இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலானது 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயிலாகும். இத்திருத்தலமானது சுமார் 750மீட்டர் உயரமுள்ள மலைமீது அமைந்துள்ளது சிறப்புவாய்ந்த ஒன்றாகும்.