வடசென்னை அதிக அளவில் சுத்திகரிப்பு நிலையங்களையும், போக்குவரத்து நிறுவனங்களயும் தன்னகத்தே கொண்டுள்ளதால், சென்னை மாநகரின் தொழிற்துறை முகமாகத் திகழ்கிறது. மேலும், அடர்த்தியான மக்கள் தொகையும் கொண்டுள்ளது. வடசென்னையின் முதன்மைப் பகுதியாக உள்ள திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயிலின் பிரதான சுவாமி - அருள்மிகு அகத்தீஸ்வரர் எனவும், அம்மன் - அகிலாண்டேஸ்வரி என்ற பெயரிலும் அருள் பாலிக்கின்றனர். இத்திருக்கோயில் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில் அமைந்துள்ள சன்னதி தெருவிலேயே உள்ளது.