வடசென்னை அதிக அளவில் சுத்திகரிப்பு நிலையங்களையும், போக்குவரத்து நிறுவனங்களயும் தன்னகத்தே கொண்டுள்ளதால், சென்னை மாநகரின் தொழிற்துறை முகமாகத் திகழ்கிறது. மேலும், அடர்த்தியான மக்கள் தொகையும் கொண்டுள்ளது. வடசென்னையின் முதன்மைப் பகுதியாக உள்ள திருவொற்றியூரில் அமைந்துள்ள இத்திருக்கோயிலின் பிரதான மூலவர் அருள்மிகு பொன்னி அம்மன் என அழைக்கப்படுகிறார்.