நீலகிரி மாவட்டம் குளிர் காற்று, பெருமழை, கடும்பனி நிறைந்ததால் சீதவளநாடு என்று அழைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான உதகை மண்டலத்தில் மையப்பகுதியில் நாளங்காடி என்ற பகுதியில் அமைந்துள்ள திருக்கோயில். ஒரே பீடத்தில் காளியம்மனையும், மாரியம்மனையும் அமர்த்தி கோயில் எழுப்பியுள்ளனர். உதகை மாரியம்மன் காளியம்மனாகவும், மாரியம்மனாகவும், காட்டேரியம்மனாகவும் மூன்று வடிவங்களைத் தாங்கியுள்ளால். முன்காலத்தில் நாளங்காடியில் வணிகர்கள் கூடியிருந்தபோது வடக்கிலிருந்து இரண்டு சகோதரிகள் அங்கே வந்தனர். ஒளிமிகு கண்களுடன் சாந்தமே உருவான தெய்வீக மனம் கமழும் முகத்துடன் வந்தவர்கள் தங்களுக்கு தங்குவதற்கு இடம் கிடைக்குமா எனக்கேட்டனர். அவர்கள் யாரென்று அறியாத வணிகர்கள் அருகிலிருந்த வேப்பமரத்தைக் காட்டி அங்கே தங்கிக்கொள்ளுமாறு கூறினர். அப்போது அந்தப் பெண்கள் மறைந்து ஒருகொடி மின்னல் விண்ணுக்கும் மண்ணுக்குமாக தோன்றி மறைந்ததாம், அந்த வேப்பமரத்தடியில் உருவானதுதான் இன்று...