நாயக்க மன்னர்கள் ஆளுகையின் போது, ஊர்கள் பாளையங்கள் ஆயின. அத்தகைய ஓர் ஊர் மத்தம்பாளையம் இவ்வூர் இன்று கோவையில் இருந்து உதகை செல்லும் பெருவழிப் பாதையில் உள்ளது. கோவையில் இருந்து 21 கி.மீ தொலைவில் உள்ளது.பேருந்துகள் மூலம் இவ்வூருக்கு எளிதில் வந்தடையலாம்.இது சுமார் முன்னூறு அல்லது நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கதை. அது நாய்க்க மன்னர்கள் காலம். ஊர்கள் பாளையங்களாக மாறிய காலம். ஊருக்கு ஒரு விநாயகர் வேண்டும் அல்லவா ? ஆகவே தெற்கே உள்ள அழகிய காஞ்சிவாய்ப் பேரூரில் இருந்து, பிள்ளையார் சிலை ஒன்றை மாட்டுவண்டியில் ஏற்றிக் கொண்டு வந்தனர். மத்தம்பாளையம் அருகே வந்தபோது வண்டியின் அச்சு முறிந்து போறிற்று. விநாயகரைக் கீழே இறக்கிவிட்டு வண்டியைப் பழுது...