இத்திருக்கோயிலானது மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் ஆளுமையின் கீழ் இருந்த பாளையப்பட்டுகளில் ஒன்றான சல்லிபட்டிபாளையத்தை (மஞ்சநாயக்கனூர்) கி.பி.1268 முதல் கி.பி.1728 வரை ஆண்ட பாளைக்காரர்களால் பராமரிக்கப்பட்டு வந்ததற்கு, பாளையப்பட்டுக்களின் வம்சாவளி தொகுதி -1ல் பக்கம் எண்.117 மற்றும் 118 ல் சரித்திரச் சான்றுகள் உள்ளன. சரித்திரஆராய்ச்சியாளர் கர்னல்மெக்கன்சி என்பவர்,பாளையக்காரர்கள் மற்றும் அவர்களது ஆட்சி பற்றிய செய்திகளைப் பாளையக்கட்டுக்களின் வரலாறு என்ற தலைப்பில் வெளியிட்டு இருக்கிறார். அதில் அர்த்தநாரிபாளையம் ஸ்ரீ அழகு திருமலைராயப் பெருமாள் திருக்கோயிலின் மகத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது.