பொது நன்கொடை பொது நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம், பக்தர்கள் வசதிக்காக ... என்ற இத்திருக்கோயில் இணையதளத்தில் இ-சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத்தலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள் (செயல் அலுவலர், அருள்மிகு சார்ங்கபாணிசுவாமி திருக்கோயில், கும்பகோணம்) என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். கோசாலை நன்கொடை தானத்தில் சிறந்து விளங்குவது கோதானம் மற்றும் அன்னதானம், இவ்விரண்டும் இத்திருக்கோயிலில் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. பசுமாடுகள் நன்கு பராமரிக்கப்படுகின்றன. ஸ்ரீ ஆண்டாள் இவ்வாராவமுதனை கோலால் நிறைமேய்த்து ஆயனாய் குடந்தைக்கிடந்த குடமாடி என்று நாச்சியார் திருமொழியில் கண்ணனாக பாவித்து பாடியதன் விளைவால் இத்திருக்கோயிலின் கோசாலை அபிவிருத்திக்கு நன்கொடை அளித்து கோதானம் செய்த பலனைப்பெற்று வாழ்வில் வளம்பெற வேண்டுகிறோம். கோசாலை பராமரிப்பிற்கு நாள் ஒன்றுக்கு ரூ.3,000/- நிரந்தர வைப்புத்தொகை ரூ.25,000/-