மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் புதுமைத்திட்டமான திருக்கோயில் அன்னதானத்திட்டம் கடந்த 14.01.2006-ஆம் ஆண்டியல் இருந்து இத்திருக்கோயிலில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் மூலம் இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு தினமும் 100 பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இதற்கான திட்டச் செலவாக பயனாளி ஒருவருக்கு ரூ.35/- செலவிடப்படுகிறது. இந்த மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் , மோர் , ஊறுகாள் ஆகியவை வழங்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் அன்னதானக்கூடத்திற்கான சமையல் அறையில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு உணவு தினமும் மதியம் 12.15 மணிமுதல் 01.30 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது அன்னதான நன்கொடை பக்தர்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். பக்தர்கள் வசதிக்காக திருக்கோயில் இணையதளத்தில் இ-சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத்தலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள் ( செயல் அலுவலர், அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், கேது பரிகார ஸ்தலம் என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம் நாள் ஒன்றுக்கு ரூ. 3,500/- நிரந்தர வைப்புத்தொகை ரூ.35,000/-