இத்திருக்கோயிலில் நாள்தோறும் மதியம் 12.00 மணிக்கு பக்தர்களுக்கு அறுசுவை உணவுடன் கூடிய அன்னதானம் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சராசரியாக சாதாரண நாட்களில் 50 பக்தர்கள் உணவு அருந்தி பயன்பெறுகிறார்கள். வெள்ளிகிழமை, அமாவாசை மற்றும் திருவிழா நாட்களில் 100 பக்தர்கள் பயன் பெறுகிறார்கள். அன்னதானத்தில் கலந்து கொள்பவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படுகிறது. மேற்படி திட்டத்தில் சாதம், சாம்பார், ரசம், பொறியல், மோர், ஊறுகாய் வழங்கப்படுகிறது. இந்த அன்னதான திட்டத்திற்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு 80(ஜி)-ன் கீழ் இரசீது வழங்கப்பட்டு வருகிறது.