இத்திருக்கோயிலில் கடந்த 15.8.2002 முதல் அன்னதான திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு நாள் அன்னதான திட்டத்திற்கு ரூ.3000- வீதமும், நிரந்தர கட்டளைக்கு ரூ.30000- வீதமும் தொகை செலுத்தி அன்னதான திட்டத்தில் பங்கேற்கலாம். மேற்படி தொகைக்கு வருமான வரி விலக்கு (80 ஜி) பெறப்பட்டுள்ளது. இதுவரை 117 நபர்கள் நிரந்தர கட்டளைத்தாரர்களாக தொகை செலுத்தி உள்ளனர். நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்கள் தாங்கள் விரும்பும் காணிக்கைகளை செலுத்த அன்னதான உண்டியல் ஒன்று திருக்கோயில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.