மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அன்னதான திட்டம் இத்திருக்கோயிலில் 15.09.2002 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உச்சிகால பூஜை முடிந்தவுடன் நண்பகல் 12.00 மணிக்கு சேவார்த்திகளுக்கு அன்னதான மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. ரூ.25000/- செலுத்தி வாழ்நாள் முழுமையும் தாங்கள் விரும்பும் ஒருநாளில் அன்னதானமிட்டு நிரந்திர கட்டளைதாரராகலாம். தங்கள் மற்றும் தங்களின் குடும்ப உறுப்பினர் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாட்களில் அன்னதானம் வழங்கிடலாம். நாளொன்றுக்கு அன்னதானமிட ரூ.2500/- அலுவலகத்தில் செலுத்தி விரும்பும் நாளில் அன்னதானமிடலாம். மேற்படி அன்னதான திட்ட நன்கொடைகளுக்கு 80ஜி வரி விலக்கு உள்ளது.